News

லண்டன் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்த நபர் கைது..

இங்கிலாந்து தலைநகர் லண்டன் சாரிங் கிராஸ் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள சாரிங் கிராஸ் ரெயில் நிலையம் நகரத்தின் மிக பரபரப்பான இடங்களில் ஒன்றாகும். இந்நிலையில், இன்று காலை ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக ஒரு நபர் அங்கிருந்து மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து ரயில் நிலையத்தில் குவிந்த ஏராளமான பொலிசார், விரைந்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அனைவரையும் வெளியேற்றியதோடு, ரயில் நிலையத்தையும் மூடி நிலையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஆயுதம் தாங்கிய அதிரடிப்படையினர் ரெயில் நிலையத்தில் குவிக்கப்பட்டனர். சிறிது நேரத்திற்கு பிறகு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் இதுகுறித்து பேசிய காவல்துறையினர், இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை எனவும், இதற்கு ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top