News

லண்டன் வீதியில் பீதியை கிளப்பிய மரணம்! குவிந்த ஆம்புலன்ஸ்-பொலிஸ் அதிகாரிகள் …..

பிரித்தானியாவில் மாரடைப்பு காரணமாக இறந்த நபர் விஷம் வைத்து இறந்திருக்கலாம் என்ற அச்சம் நிலவியதால், அப்பகுதிக்கு ஏழுக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள், பொலிஸ் அதிகாரிகள் விரைந்துள்ளனர். பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Mayfair பகுதியில் இருக்கும் Albemarle வீதியில் ஒருநபர் சுயநினைவற்று கிடப்பதாக London Ambulance Service-க்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதிக்கு விரைந்து பார்த்த போது அந்த நபர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்பது உறுதியாகியுள்ளது. இறந்த நபர் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்ற தகவல் பரவியதால், அங்கு ஏராளமான பொலிசார் விரைந்து அப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். அதன் பின் ஏதேனும் ஆதாரம் இருக்குமா என்று பார்த்த போது, அந்த நபர் மாரடைப்பு வந்து இறந்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.

இது குறித்து உள்ளூர் ஊடகம் தெரிவிக்கையில், சரியாக உள்ளூர் நேரப்படி இன்று மாலை 03.15 மணிக்கு லண்டன் ஆம்புலன்ஸ் சர்விசிற்கு இதைப் பற்றிய தகவல் தெரிவித்துள்ளது. உடனடியாக அவர்கள் முதலில் இது குறித்து பொலிசாருக்கு தெரிவித்துவிட்டு, அடுத்த 5-வது நிமிடமே அங்கு சென்றுள்ளனர். அப்போது அந்த நபர் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்ற தகவல் பரவியதால், அங்கு ஏராளமான பொலிசார் விரைந்தனர்.

ஏனெனில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் ரஷ்யாவின் முன்னாள் உளவாளி Sergei விஷம் வைத்து கொலை செய்ய முயற்சி செய்யப்பட்டதால், இதுவும் அதே போன்று இருக்குமோ என்ற எண்ணத்தில் அங்கு ஏராளமான பொலிசாரும், ஆம்புலன்சும் வரவழைக்கப்பட்டுள்ளது. அவர் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டார் என்று உறுதியானதால், அப்பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருந்த பொலிசார் சில மணி நேரங்களுக்கு பின்னர் கட்டுப்பாட்டை தளர்த்தியுள்ளனர்.

மேலும் இறந்த நபர் குறித்து எந்த தகவலும் தற்போது வரை எந்த தகவலும் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தின் காரணமாக ஹெலிகாப்டர், ஏழுக்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகள் அந்த வீதியில் விரைந்ததால் அங்கு சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top