லண்டனில் Knightsbridge பகுதியில் அமைந்துள்ள 5 நட்சத்திர ஹொட்டலில் பெருந்தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து நூற்றுக்கணக்கான தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் போராடி வருகின்றனர்.
லண்டனில் Knightsbridge பகுதியில் செயல்பட்டு வரும் 5 நட்சத்திர ஹொட்டலான Mandarin Oriental-ல் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து 15 தீயணைப்பு இயந்திரங்களுடன் நூற்றுக்கணக்கான வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து நடந்த Knightsbridge பகுதியில் கரும்புகை சூழ்ந்துள்ளதாகவும், அப்பகுதி மக்கள் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர். தீ விபத்தை அடுத்து அந்த பகுதி வழியாக செல்லும் பேருந்துகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் ஹொட்டலுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியும் துரிதமாக நடைபெற்று வருகிறது. விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.