News

வடகொரிய அதிபர் சிங்கப்பூர் பிரதமருடன் சந்திப்பு.

சிங்கப்பூர் பிரதமர் லீயை இன்று சந்தித்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன், ட்ரம்ப் உடனான பேச்சுவர்த்தைக்கு ஏற்பாடு செய்தமைக்காக நன்றி தெரிவித்தார். #

அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு வரும் செவ்வாய் அன்று நடைபெற உள்ள நிலையில், கிம் ஜாங் அன், சிஙகப்பூர் பிரதமர் லீ லூங்கை இன்று சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது, சிங்கப்பூர் பிரதமர் லீ லூங்குடன் பேசிய கிம் ஜாங் அன், ‘‘அமெரிக்கா மற்றும் வடகொரியாவிற்கு இடையிலான இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பை உலக நாடுகள் உற்று நோக்கியுள்ளன. இந்த சந்திப்பிற்காக நீங்கள் எடுத்த முயற்சிகளுக்கு நன்றிகள்” என தெரிவித்தார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top