வலிவடக்கில் பொதுமக்களின் காணி விடுவிப்பு.

யாழ்ப்பாணம், வலி வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த மேலுமொரு தொகுதி பொது மக்களது காணி இன்றைய தினம் மீள கையளிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் யாழ்.மாவட்ட இராணுவ தலைமையகத்தால் வலி வடக்கில் பளை, வீமன்காமம் வடக்கில் உள்ள ஜே -.236 கிராம சேவகர் பிரிவில் 33 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு அதற்கான காணி உறுதிகள் தெல்லிப்பழை பிரதேச செயலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இக் காணிகளானது 27 ஆண்டுகளின் பின்னர் பொது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன் மாவிட்டபுரம் கோவிலினை கடந்து சென்று காங்கேசன்துறை சீமெந்து தொழற்சாலையின் பிரதான வாயிலுக்கு எதிராகவுள்ளது.
மேலும் பொதுமக்கள் விடுவிக்கப்பட்ட பகுதியிலுள்ள தமது காணிகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.