Canada

வாகன விபத்தில் மூன்று சகோதரிகள் உட்பட ஐவர் கொல்லப்பட்டனர்?

கனடா-எட்மன்டனில் மூன்று சகோதரிகள்-இரு இளம் தாயார்கள் உட்பட்ட-ஐவர் வாகன விபத்தில் கொல்லப்பட்டனர். எட்மன்டனில் மிக சிறிய கிராமம் ஒன்றிற்கு அருகாமையில் இரண்டு வாகனங்கள் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

டொமினிக் சூசே 19வயது ஷெயானே சூசே 22- இவருக்கு ஐந்து வயதிற்குட்பட்ட மூன்று குழந்தைகள் உள்ளனர். லட்ரெஷா சூசே 25 இரு பிள்ளைகளின் தாயார்.7-வயது மகள் மற்றும் 5-வயது மகன். அனைவரிற்கும் இது ஒரு பெரிய இழப்பாகும்.

ஒரே வாகனத்தில் இருந்து நால்வரும் மற்றய வாகனத்தில் இருந்து ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர். எட்மன்டனில் இருந்து 50கிலோ மீற்றர்கள் தொலைவில் பிசியான நெடுஞ்சாலைக்கு வெளியே விபத்து நடந்துள்ளது.

விபத்திற்கான காரணங்கள் குறித்து ஆர்சிஎம்பி அதிகாரிகள் புலன் விசாரனை செய்து வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top