Canada

வானிலிருந்து பெய்த கழிவு மழை: மறுக்கும் அதிகாரிகள் !!

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் காரில் பயணித்துக் கொண்டிருந்த Sue Allanம் அவரது மகனும் சிக்னலில் நின்று கொண்டிருந்தார்கள். காரில் ஏசி வேலை செய்யாததால், காரின் மேல் பகுதியில் உள்ள sunroof திறந்திருந்தது. அப்போது திடீரென்று வானிலிருந்து துர்நாற்றத்துடன் ஏதோ அவர்கள் மீதும் கார் மீதும் விழத் தொடங்கியது. Sue Allanஇன் கண்களிலும் அந்தப் பொருள் விழுந்தது.

நாற்றம் தாங்க முடியாமல் காரை கார் வாஷ் செய்யுமிடத்திற்கு கொண்டு சென்ற Sue Allanம் அவரது மகனும் காரை சுத்தம் செய்வதற்காக கொடுத்துவிட்டு, Sue Allan மருத்துவரிடம் சென்றார். அவரைப் பரிசோதித்த மருத்துவர் அவருக்கு கண்களில் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

Sue Allan தன் மீது விழுந்த பொருள் ஆகாய விமானத்தின் கழிவறையிலிருந்து விழுந்த மனிதக் கழிவு என்கிறார். ஆனால் இது குறித்து விசாரித்த கனடா போக்குவரத்து துறையோ அது மனிதக் கழிவு அல்ல என்று மறுத்துள்ளது.

இதுபோன்ற 18 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், மக்கள் அது விமானத்திலிருந்து விழுந்த “blue ice,” என்று அழைக்கப்படும் உறையச் செய்யப்பட்ட மனிதக்கழிவு என்று புகாரளித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

இது குறித்து ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் அது “blue ice,” அல்ல என்றும் அதனால் அது விமானத்திலிருந்து விழுந்தது இல்லையென்றும் கூறி விட்டனர். இதை ஏற்க மறுத்துள்ள Sue Allan, அது மனிதக் கழிவுதான் என்றும் அதை தன்னால் நிரூபிக்க முடியாததால் வருத்தமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top