விக்னேஸ்வரனின் கோரிக்கை புதுமையானது என்கிறார் ராஜித!

வட மாகாண முதலமைச்சரின் கோரிக்கைக்கு அமைய, வட மாகாண சபையின் அதிகார காலம்நிறைவடைந்த பின்னர், அதன் அதிகாரத்தை அவரிடமே கையளிக்க முடியாது என அமைச்சரவை இணைபேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். முன்னாள் நீதியரசராக இருந்த அவர் இவ்வாறானதொரு கோரிக்கையை முன்வைப்பது தமக்குபுதுமையாக உள்ளதென்றும் அமைச்சர் ராஜித குறிப்பிட்டுள்ளார்.
வட மாகாண சபையின் அதிகார காலம் எதிர்வரும் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடையவுள்ளது. இந்த நிலையில், சபையின் அதிகார காலம் நிறைவடைந்த பின்னர், அதன் அதிகாரத்தைஆளுநரிடம் கையளிக்காமல் தம்மிடமே வழங்குமாறு வட மாகாண முதலமைச்சர்சி.வி.விக்னேஸ்வரன் அண்மையில் கோரியிருந்தார். இது குறித்து அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களைஅறிவிக்கும் ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப்பதிலளித்த போதே அமைச்சர் ராஜித சேனாரட்ன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.