விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் திடீர் மரணம்!!!

விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறை துணைப்பொறுப்பாளர் ஐங்கரன் நேற்று இரவு 11 மணியளவில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
மூதூர் கிழக்கில் பல நூற்றுக்கணக்கானவர்கள் அரச உத்தியோகத்தில் இருப்பதற்கு காரணமானவராகவும், மாவீரர் குடும்பங்களுக்கான வீடமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்திய முக்கிய கர்த்தாவாகவும் இவர் விளங்குகின்றார்.
இதேவேளை, ஐங்கரன் ஒரு அரசியல் வாதியின் சேவைக்கு மேல் சென்று தான் நேசித்த மக்களுக்காக சேவை ஆற்றிய ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவரின் மறைவிற்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளதுடன், ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளனர்.