News

விடுதலைப் புலிகளை வெளிநாடுகளைத் தளமாக கொண்ட ஆயுத இயக்கமாக வகைப்படுத்தியுள்ள சிஐஏ!

அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவு( CIA) நாடுகள் குறித்த World Factbook என்ற தலைப்பிலான தகவல்களை தமது இணையத்தளத்தில் ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது. 2018 – 2019ஆம் ஆண்டிற்கான World Factbook தகவல்களை அண்மையில் வெளியிட்டுள்ளது, இதில், “வெளிநாடுகளை தளமாக கொண்டு செயல்படும் ஆயுத இயக்கம்” என்ற வகைக்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அடங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

“வெளிநாடுகளை தளமாகக் கொண்டு செயல்படும் அமைப்புகள்” என்ற வகைக்குள் மேலும் பல அமைப்புக்களை அமெரிக்காவின் புலனாய்வு முகவர் நிறுவனம் உள்ளடக்கியுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கம், அல்கொய்தா, ஹர்ஹத் உல் ஜிஹாதி இஸ்லாம், ஹர்ஹத் உல் ஜிஹாதி இஸ்லாம் – வங்கதேசம், ஜெய்சியே முகமது, லஸ்கர் இ தொய்பா ஆகிய ஆயுத அமைப்புகளும் இணைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, இந்துத்துவா அமைப்புகளான விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் ஆகியவை “மத ஆயுத குழுக்கள்” என CIA வகைப்படுத்தியுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top