சென்னையில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற தனியார் பேருந்து விழுப்புரம் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 20 பேர் காயமடைந்தனர்.
சென்னையில் இருந்து திண்டுக்கல் நோக்கி தனியார் பேருந்து ஒன்று இன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து விழுப்புரம் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து பேருந்து விபத்துக்குள்ளானது.
இதில் அந்த பேருந்தில் பயணம் செய்த 20 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் ஒண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.