வீட்டுடன் மோதிய பாடசாலை பேரூந்து! 10 பேர் காயம்.

ஒட்டாவா-ஒட்டாவா தெற்கில் பாடசாலை பேரூந்து ஒன்று வீடொன்றுடன் மோதியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். விபத்து காரணமாக சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமி ஒருவருக்கு கையில் காயமேற்பட்டுள்ளது. 10 பேர்களிற்கு காயமேற்பட்டுள்ளதெனினும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படவில்லை. பேரூந்தில் எத்தனை பேர்கள் இருந்தனர் என்பது உடனடியாக தெரியவரவில்லை.