ஸ்காட்லாந்தில் ஒரு முக்கிய சிக்னல் அருகே ஒரு நபர் இன்னொரு நபரை பயங்கரமான ஆயுதம் கொண்டு துரத்துவதும் அதனை கண்டு இன்னொரு நபர் பயந்து ஓடுவதுமாக ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை காலை 6.20 மணியளவில் கிளாஸ்கோவின் காஸ்ட்லெவில்லில் நடைபெற்றது. போக்குவரத்து விளக்குகளுக்கு அருகே சாலையின் நடுவில் இரண்டு பேருக்கிடையிலான மோதலின் போது நடைபெற்றது.
இச்சம்பவம் குறித்து வெளியான 36 நொடி வீடியோவின் படி மிக நீளமான வாள் கொண்டு ஒருவன் துரத்த அதனை கையில் பாட்டிலோடு ஒருவர் எதிர்க்கிறார். பின்னர் பாட்டிலை கீழே போட்டு விட்டு வாள் தாக்குதலில் இருந்து தப்பிக்க ஓடுகிறார். அவரை பின்னாலேயே சென்று வாளால் வெட்ட முனையும் கொலையாளி எதிரே பொலிஸாரின் காரைக் கண்டதும் அருகிலிருந்த சந்துக்குள் ஓடி மறைகிறான்.
இந்த சம்பவம் பற்றி ஸ்காட்லாந்தை சேர்ந்த செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில் , கடந்த ஜூன் மாதம் 1 ஆம் தேதி மாலை 6.20 மணியளவில் ஆயுதங்களோடு ஒரு மனிதன் அச்சுறுத்தும் வகையில் சுற்றுவதாக புகார் வந்ததை அடுத்து அவனை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தோம். அவனை தேடிய இடத்தின் அருகிலேயே இந்த சம்பவம் நடைபெற்றது. எங்கள் வாகனத்தை பார்த்ததும் அவன் தப்பி ஓடிவிட்டான்.
தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை இருப்பினும் அவனை ஹெலிகாப்டர் மூலம் தேடும் முயற்சிகள் தொடர்கின்றன. இது பற்றிய விசாரணை இன்னும் பலப்படுத்தப்பட்டிருக்கிறது என்று கூறினார். பட்டப்பகலில் ஸ்காட்லாந்தில் இது போன்ற சம்பவம் நடந்தது அங்குள்ளோரை அச்சப்படுத்தியிருக்கிறது.