Canada

ஸ்கார்பரோவில் துப்பாக்கிச் சூடு: ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட 2 குழந்தைகள்…..

கனடாவின் ஸ்கார்பரோ பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இரண்டு குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்கார்பரோ பகுதியில் உள்ள McCowan Road and McNicoll Avenue,ல் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது.

ஸ்கார்பாரோவில் இன்று (14.6.2018) மாலை 5 மணியளவில் மெக்க்வன் ரோட் மற்றும் மெக்னிக்கல் அவென்யூவின் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புப் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் ஆண் ஒருவர் துப்பாக்கியால் சுட்டத்தில் ஐந்து மற்றும் ஒன்பது வயதான இரண்டு இளம் பெண்கள் படுகாயமடைந்தனர். இன்னேரத்தில் பூங்காவில் மற்றும் 11 சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த அவசர உதவி மருத்துவ குழுவினர் படுகாயமடைந்த இரு குழந்தைகளையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட குழந்தையில் ஒன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

துப்பாக்கி சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில் சம்பவம் நடந்த பகுதியில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top