ஸ்வீடனில் லொறியை மோதவிட்டு 5 பேரை கொலை செய்த பயங்கரவாதி: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு .!!

ஸ்வீடனில் பொதுமக்கள் மீது லொறியை மோதவிட்டு 5 பேரை கொலை செய்த ஐ.எஸ் பயங்கரவாதிக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தலைநகர் ஸ்டாக்ஹோமில் அமைந்துள்ள நீதிமன்றம் வியாழனன்று குறித்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 7 ஆம் திகதி ஸ்டாக்ஹோம் நகரில் அமைந்துள்ள முக்கிய வணிக வீதியில் இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. உஸ்பெகிஸ்தான் நாட்டவரான 40 வயது Rachmat Akilow திட்டமிட்டே குறித்த தாக்குதலை முன்னெடுத்துள்ளார்.
சம்பவத்தன்று திருடிய லொறி ஒன்றை பொதுமக்களிடையே செலுத்தி கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் 5 பேர் சம்பவயிடத்தில் கொல்லப்பட்டதுடன், சுமார் 150 பேர் படுகாயமடைந்தனர்.
ஸ்வீடன் அரசு ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிடுமாறு முன்னெச்சரிக்கை செய்யவே குறித்த தாக்குதலில் ஈடுபட்டதாக விசாரணையின்போது Rachmat Akilow தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.