News

24ஆவது நாளும் மனித எழும்பு கூடு அகழ்வு பணிகள் தொடர்கிறது….

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 24ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மன்னார் நீதவான் ரி.ஜே.பிராபாகரன் முன்னிலையில் இடம் பெற்று வருகின்ற அகழ்வு பணிகளுக்கு விசேட சட்ட வைத்திய நிபுணர் டபில்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஷ தலைமை தாங்கிவருகின்றார்.

மன்னாரில் மனித எச்சங்கள் எலும்புகூடுகள் கண்டுபிடிக்கும் நோக்குடன் அகழ்வு செய்யப்பட்டு வரும் புதைகுழி இடத்தை இன்று பெரிதாக்கி அகழ்வு செய்யப்பட்டபோது தொடர்ந்து மனித எலும்புக்கூடுகள் தென்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் மன்னாரில் சதொச விற்பனை நிலைய கட்டிட கட்டுமான பணியின்போது இவ்விடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்களைத் தொடர்ந்தே இன் று (29) 24 வது நாளாக இவ் அகழ்வு பணி நடைபெற்றது.

இவ் அகழ்வு பணியின்போது ஒரு புறம் ஏற்கனவே கண்டுபிடித்து அடையாளமிடப்பட்டிருந்த எலும்புக்கூடுகள் மண்டையோடுகளை வெளியேற்றும் பணி நடைபெற மறுபுறம் மண்களை அகழ்வு செய்யும் பணியும் நடைபெற்றன. அப்பொழுது புதிதாக அகழ்வு செய்யப்பட்ட இடத்திலும் ஒரிரு எலும்புகூடுகள் தென்பட்டுள்ளது.

இன்று நண்பகல் 12 மணியுடன் இவ் பணி இடை நிறுத்தப்பட்டு மீண்டும் திங்கட் கிழமை ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top