Canada

Ontarioவில் பேருந்து ஒன்று பாறையில் மோதிய விபத்தில் 27 பேர் காயம் அடைந்தனர்.

PRESCOTT, Ont. அருகவே இருக்கும் highway 401 வெஸ்ட்ல் திங்கள்கிழமை மதியம் 2.30 pm அளவில் சுற்றுலா பயணிகள் கொண்ட பேருந்து ஒன்று பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. பேருந்தில் மொத்தம் 37 நபர்கள் பயணித்தனர். இதில் சுற்றுலா பயணிகள் அனைவரும் சீனாவை சார்ந்தவர் என்பதும் அவை அனைவரும் 40 முதல் 60 வது வயதிற்கு உட்பட்டவர் என்பதும் குறிப்பிடதக்கது.

இவர்களில் சுமார் 27 பேர் விபத்தில் காயம் அடைந்தார். காயம் அடைந்தவர்களில் 20 வது பேர் ஒட்டாவாவில் அமைந்துள்ள Queensway-Carleton மருத்துவமனையிக்கும், 5து நபர் Brockville General Hospitalக்கும் ஸ்கூல் பஸ் மூலம் கொண்டு செல்ல பட்டனர். ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதனால் மருத்துவ வானுர்திமூலம் (Air ambulance) Kingstonல் அமைந்துள்ள மத்துவமனைக்கு ஒன்றுக்கு எடுத்து செல்ல பட்டார்.

மருத்துவமனையில் இருந்து வந்த தகவலின் படி காயம் அடைந்த அனைவரும் தற்பொழுது நல்ல நிலையிலுள்ளார்களாம். விபத்துக்கு உண்டானவர்களுக்கு மாண்டரின் தவிர்த்து வேறு மொழி தெரியாததால் மாண்டரின் தெரிந்த மருத்துவமனை ஊழியர்களின் உதவியுடன் தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top