Canada

அகதி குடும்பத்தினரின் சாக்கலேட் தயாரிப்பு கனடா பூராகவும் விற்பனை!

6சிரிய நாட்டு அகதி ஒருவர் ஆரம்பித்த சாக்கலேட் கம்பனி அதன் தயாரிப்புக்களை வெகு விரைவில் கனடா பூராகவும் விற்பனை செய்ய உள்ளது. கனடாவின் இரண்டாவது மிகப்பெரிய சில்லறை விற்பனையாளர்களான Sobeys இந்த விற்பனையை மேற்கொள்ள உள்ளது.

சிரியாவில் டமஸ்கஸை சேர்ந்த ஹட்காட் குடும்பத்தினரின் சாக்கலேட் தொழிற்சாலை 2012-ல் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் அழிக்கப்பட்டது. அங்கிருந்து லெபனான் சென்ற இவர்கள் அகதி முகாமில் 3-வருடங்கள் தங்கியிருந்தனர்.

இரண்டு வருடங்களிற்கு சிறிது முன்னராக நோவ ஸ்கோசிய வந்த இவர்கள் மீண்டும் சாக்கலேட் தயாரிக்கும் தொழிலை அவர்களது வீட்டின் சிறிய பகுதி ஒன்றில் ஆரம்பித்தனர். Peace by Chocolate என்ற பெயர் கொண்ட இவர்களது தயாரிப்பின் தேவைகள் அதிகரிக்க 2017-ல் அன்ரிகோநிஷ் என்ற இடத்தில் பெரிய நவீன மயமான தொழிற்சாலை ஒன்றை ஆரம்பித்தனர்.

 

கனடியர்கள் சமாதானத்தின் முக்கியத்துவத்தையும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளவும் தான் விரும்புவதாக நிறுவன சொந்தகாரரின் மகனும் பேச்சாளருமான தரீக் ஹதாத் தெரிவித்தார். இவர்கள் கனடாவின் புதிய வரவாளர்களிற்கு ஒரு உதாரணமாக இருப்பர் என பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ வெளிப்படுத்தியுள்ளார்.


உலகம் பூராகவும் இருந்து ஆர்டர்கள் வர தொடங்கியுள்ளன மிகவும் பிடித்தமான நிறுவனத்தின் Peace Bar எனப்படும் ஒரு பால் சாக்கலேட் வகை “peace” என்ற வார்த்தையுடன் பல மொழிகளிலும் பதியப்பட்டு பொதி செய்யப்பட்டுள்ளது. கனடாவின் இரண்டாவது மிகப்பெரிய சில்லறை விற்பனையாளர்களான சோபீஸ் நிறுவனம் வெகு விரைவில் இத்தயாரிப்புக்களை தேசிய ரீதியில் விற்பனை செய்ய முன்வந்துள்ளது.

Latest News

To Top