அதிதீவிர வெப்பத்தால் நெடுஞ்சாலை பிளவு!

ஒன்ராறியோ-நெடுஞ்சாலை 3-ன் ஒரு பகுதி எசெக்ஸ் கவுன்ரி, ஞாயிற்றுகிழமையின் அதிதீவிர வெப்பத்தினால் வெடித்து பிளவு பட்டது. இதனால் அப்பகுதி போக்குவரத்திற்காக மூடப்பட்டது.வீதியின் இரு பக்கங்களும் சேதமடைந்துள்ளது.
ரெக்யூம்ஸ் மற்றும் லேக்க்ஷோரிற்கு இடைப்பட்ட சாலை வின்ஸ்டர், ஒன்ராறியோவிற்கு அருகாமையில் வெப்பம் காரணமாக பாதை வெடித்து பிளவு பட்டதால் குறிப்பிட்ட பகுதி போக்குவரத்திற்கு உகந்ததல்ல என்ற காரணத்தால் மறு அறிவிப்பு வரும்வரை ஒன்ராறியோ மாகாண பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதே போன்று ஒன்ராறியோ, கியுபெக் மற்றும் அட்லான்டிக் கனடா போன்ற இடங்களிலும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக கனடா சுற்று சூழல் தெரிவித்துள்ளது.