News

அரசு தமிழ் மக்களை ஏமாற்றியதன் வெளிப்பாடே விஜயகலாவின் கூற்று: மகிந்த..

இந்த அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டது என்பதன் வெளிப்பாடே முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரனின் கூற்று என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

முத்தியங்கன ரஜமஹா விகாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளை மீள உருவாக்குவதாக விஜயகலா மகேஸ்வரன் கூறி இருக்கின்ற விடயம் பிழையானது. இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஆனால் அந்த கூற்றின் பின்னணியில் சொல்லப்படாதவிடயம், அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்கிய போலி உறுதிமொழிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை என்பதாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் முழு மக்களையும் ஏமாற்றியுள்ளது என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது, அதேநேரம் அரசாங்கத்தின் இயலாமையாலேயே நாட்டில் கொலை உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரித்திருக்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top