மகன் உயிரிழந்தது ஏன்? இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்த தாய்.

போதை மருந்துகளை உட்கொண்டதால் மகன் உயிரிழந்த நிலையில் தாய் ஒருவர் மற்ற இளைஞர்களுக்கு அது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். Dorset கவுண்டியை சேர்ந்தவர் சாரா. இவர் மகன் ரீஸ் முர்பி (16). ரீஸ், நண்பர்களுடன் சேர்ந்து போதை மருந்துகளை அவ்வபோது சாப்பிடும் பழக்கத்தை கொண்டிருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் அப்படி போதை மருந்துகளை சாப்பிட்ட போது அதன் வீரியம் அதிகமாகி வீட்டில் சுருண்டு விழுந்துள்ளார். இதையடுத்து மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்ட ரீஸுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில் ரீஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற புகைப்படத்தை கனத்த இதயத்துடன் அவர் தாய் சாரா வெளியிட்டு மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். சாரா கூறுகையில், போதை மருந்து குடும்ப நிம்மதியை அழித்துவிடும் என்பதற்கு ரீஸ் வாழ்க்கை உதாரணம்.
அவன் இல்லாமல் என் இதயம் வெறுமையாக உள்ளது, இனி ரீஸின் குரலையும், சிரிப்பையும் நான் கேட்க முடியாது. போதை மாத்திரைகள் மகிழ்ச்சியை தரும் என பலர் நினைக்கிறார்கள், ஆனால் அது முடிவில் நமக்கு பெரிய வலியை தான் ஏற்படுத்தும்.
அதனால் எச்சரிக்கையாக இருங்கள் என கூறியுள்ளார்.