ஆசிரியரின் அலட்சியத்தால் இறந்த மாணவன்!

ரொறொன்ரோ உயர்தர பாடசாலை மாணவன் ஒருவன் யூலை 2017ல் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளான். கிரிமினல் அலட்சியம் காரணமாக மரணம் ஏற்பட்டதாக ஆசிரியர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஜெரமயா பெரி 15வயது C.W. Jeffreys Collegiate Institute சேர்ந்த மாணவன் சக வகுப்பு மாணவர்களுடன் கடந்த வருடம் கோடைகாலத்தில் அலோங்குயின் பார்க்கிற்கு படகு சுற்றுலா சென்ற போது நீரில் மூழ்கி விட்டான்.
அச்சமயம் பெரி பாதுகாப்பு ஜக்கெட் அணிந்திருக்கவில்லை. மாணவர்களுடன் தண்ணீருக்குள் சென்ற பெரி நீரில் அடித்து செல்லப்பட்டு பின்னர் புதர் ஒன்றிற்குள் ஒதுங்கியுள்ளான். பயணத்தை ஒழுங்கு செய்தவர் நிக்கலஸ் மிலஸ் 54-வயது ஆசரியர் ஒருவராவார். சுற்றுலாவிற்கு சென்ற 32-மாணவர்களில்-பெரி உட்பட- பாதி மாணவர்கள் மிதவை சட்டை அணிந்திருக்கவில்லை என ரொறொன்ரோ மாவட்ட கல்வி சபை பின்னர் தெரியப்படுத்தியது.
சுற்றுலாவிற்கு முன்னர் செய்யப்பட வேண்டிய கட்டாய நீச்சல் சோதனையும் நடத்த தவறிவிட்டதாக சபை தெரிவித்துள்ளது.
முழுமையான மற்றும் தொழில் நெறி விசாரனையை தொடர்ந்து குறிப்பிட்ட ஆசிரியர் மீது குற்றம் சுமத்தப்பட்டதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸ் அறிவித்துள்ளது.