ஆப்கானிஸ்தானில் உயிருக்கு போராடி கொண்டுயிருக்கும் 60 மாணவிகள்!!

ஆப்கானிஸ்தானில் விஷம் கலந்த தண்ணீரை குடித்து 60க்கும் மேற்பட்ட மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனார். கிழக்கு பகுதியில் உள்ள ஜர்பியா பெண்கள் மேல்நிலை பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு அருகில் உள்ள கால்வாயில் இருந்து தண்ணீர் விநியோகிக்கப்பட்டுள்ளது. அதனை அருந்திய 100 மாணவிகள் மயங்கி விழுந்தனர்.
அவர்களில் 60 மாணவிகள் உயிருக்கு போராடி கொண்டுயிருகின்றனர். அவர்களின் நிலைமை மோசமாக உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் வந்துள்ளதால் அங்கு பரபரப்பு எற்பட்டுள்ளது.
பின் கால்வாயில் வந்த தண்ணீரை சோதனை செய்த போது அதில் கடுமையான விஷம் கலந்துயுள்ளது என தெரியவந்துள்ளது.இந்த தண்ணீரில் விஷம் கலந்தது தொடர்பாக விசாரனை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.