ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் கனடாவில் நுழைய அனுமதி மறுப்பு..

கனடா நாட்டுக்கு சென்ற ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏக்களை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்திய சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களை மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பினர். #
ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த குல்தர் சிங் சந்த்வான், அமர்ஜித் சிங் சண்டோ ஆகிய 2 எம்.எல்.ஏக்கள் சொந்த காரணங்களுக்காக கனடா சென்றுள்ளனர். அப்போது, டொரோண்டோ விமான நிலையத்தில் அவர்களை தடுத்து நிறுத்திய அந்நாட்டு சுங்கத்துறை அதிகாரிகள், கனடா வந்ததற்கான காரணம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.
சுங்கத்துறை அதிகாரிகளின் கேள்விக்கு குல்தர் சிங் மற்றும் அமர்ஜித் சிங் முறையாக பதிலளிக்காததால், கனடாவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு, விமானம் மூலம் மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இந்த செய்தியை கனடாவில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் உறுதி படுத்தியுள்ளார்.
திருப்பி அனுப்பப்பட்ட எம்.எல்.ஏக்களில் அமர்ஜித் சிங் மீது பாலியல் புகார் நிலுவையில் இருப்பதால், அதன் காரணமாக கனட சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களை திருப்பி அனுப்பி இருக்கலாம் என கூறப்படுகிறது.