News

இந்திய மாணவன் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: சந்தேக நபரின் வீடியோவை வெளியிட்ட பொலிஸ் !

அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய மாணவர் தொடர்பில் வீடியோ ஒன்றை மாகாண பொலிசார் வெளியிட்டுள்ளனர். குறித்த மர்ம நபர் தொடர்பில் தகவல் தெரிவிக்கும் நபருக்கு 10,000 டொலர் சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர். இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரத் கோபு (26). இவர் அமெரிக்காவின் மிசவுரி மாகாணத்தில் உள்ள கன்சாஸ் பல்கலைக்கழகத்தில் சாப்ட்வேர் என்ஜினியரிங் படித்து வருகிறார்.

இந்நிலையில், வெள்ளியன்று இரவு 7 மணியளவில் சரத் அந்த பகுதியில் செய்லபடும் ஓட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு திடீரென மர்ம நபர் புகுந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இதில் சரத் கோபு சம்பவயிடத்திலேயே மரணமடைந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

சரத்தை சுட்டது யார் என்பது குறித்தும், அதற்கு காரணம் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்த விவகாரம் தொடர்பில் கன்சாஸ் பொலிசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், தொடர்புடைய சந்தேக நபர் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாருக்கு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதனிடையே சரத்தின் உடலை இந்தியாவுக்கு எடுத்துச்செல்ல இந்திய தூதரகம் உதவி செய்ய வேண்டும் என அவரது குடும்பத்தினர் மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top