இந்தோனேசியா நிலநடுக்கத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு, 150க்கு மேற்பட்டோர் படுகாயம்!!

இந்தோனேசியாவில் உள்ள லம்பாக் தீவின் அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனேசியா நாடு பல்வேறு தீவுகளை கொண்டது. இது அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்படும் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ளது. இதனால் இங்கு அடிக்கடி பூகம்பம் ஏற்பட்டு வருகிறது.
இதற்கிடையே, நேற்று அதிகாலை அங்கு பூகம்பம் ஏற்பட்டது. சுமத்ராவை ஒட்டியுள்ள லம்பாக் என்ற தீவின் அருகே கடலில் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளது. . கடலுக்கு அடியில் 7 கிலோ மீட்டர் ஆழத்தில் அதன் மையப்புள்ளி அமைந்திருந்தது. ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தால் அந்த தீவில் இருந்த ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து சேதமாகின. கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 10 பேர் வரை பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 150க்கு மேற்பட்டோர்
படுகாயம் அடைந்துள்ளனர். மீட்புக் குழுவினர் அவர்களை மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். தொடர்ந்து அங்கு சீரமைப்பு பணிகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.