News

இந்தோனேசியா படகு விபத்து – பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு.

இந்தோனேசியாவில் நேற்று நிகழ்ந்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31-ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தோனேசியாவில் உள்ள சுலாவேஸி தீவு பகுதியில் 164 பேருடன் சென்ற படகு நேற்று விபத்துக்குள்ளானது. படகில் பயணம் செய்தவர்களில் 12 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியது.

விபத்துக்குள்ளான படகில் 48-க்கும் மேற்பட்ட கார், மோட்டார் சைக்கிள் ஆகியவை இருந்ததுள்ளது. விதிமுறைகளை மீறி அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான பயணிகள் மற்றும் வாகனங்களை ஏற்றியதே விபத்து ஏற்பட முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

 

இந்நிலையில், படகில் பயணம் செய்தவர்களில் மேலும் 19 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக இன்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31-ஆக அதிகரித்துள்ளது. படகில் விபத்து ஏற்பட்டதும் படகை ஓட்டிச் சென்றவர் அருகாமையில் இருந்த பாறை மீது லாவகமாக படகை செலுத்தி படகு நீரில் மூழ்காமல் இருக்க முயற்சித்துள்ளார்.

இதனால், படகில் இருந்த நூற்றுக்கணக்கானவர்களில் பலர் பத்திரமாக படகில் இருந்து வெளியேறி உயிர் தப்பினர் என இந்தோனேசிய கடல் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் அந்நாட்டின் சுமத்ரா தீவு அருகே உள்ள தோபா ஏரியில் பயணிகளை ஏற்றி சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் படகில் இருந்த 200-க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top