valsartan என்ற மூலப்பொருள் அடங்கிய மருந்துகள் பலவற்றை மருந்து உற்பத்தியாளர்கள் மீள அழைக்கின்றனர். செவ்வாய்கிழமை வெளியிடப்பட்ட கனடா சுகாதார பிரிவின் பத்திரிகை வெளியீட்டின் பிரகாரம் தெரியவந்துள்ளது. உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்களை மார்படைப்பு, பக்க வாதம் மற்றும் இதய செயலிழப்பு அல்லது சமீபத்திய மாரடைப்பு போன்ற நோய்களிலிருந்து தடுக்க உபயோகிக்கப்படுகின்றது.
மருந்துகளில் உபயோகிக்கும் வல்சார்டன்-valsartan-னில் ஒரு வகை மாசு படிந்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது. இந்த மருந்துகள் சீன கம்பனியான Zhejiang Huahai Pharmaceuticals-யால் விநியோகிக்கப்பட்டவை. இந்த மாசு பொருள் புற்று நோய் ஏற்பட சாத்தியமான ஒன்றென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லீரலையும் சேதமடைய செய்யும் எனவும் ஐக்கிய அமெரிக்க சுற்று சூழல் பாதுகாப்பு நிறுவன கூற்று பிரகாரம் தெரிய வந்துள்ளது. ஐரோப்பா முழுவதும் கூட இந்த மருந்துகள் மீள அழைக்கப்பட்டுள்ளன. valsartan-கொண்டிருக்கும் மருந்தை உபயோகிப்பவர்கள் அவர்களது மருந்தாளர்களுடன் தொடர்பு கொண்டு மருந்து மிள அழைக்கப்பட்டுள்ளதா என அறிந்து கொள்ளுமாறு கனடா சுகாதார பிரிவு அறிவுறுத்துகின்றது.
பாதிக்கப்பட்ட மருந்தை உபயோகிப்பவர்களாயின் உங்களது சுகாதார பராமரிப்பு பயிற்சியாளருடன் தொடர்பு கொண்டு சிகிச்சை குறித்து கலந்துரையாடுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றது.
கனடா சுகாதார பிரிவினால் வழங்கப்பட்ட பட்டியல்:
-VALSARTAN/HCTZ TABLETS PP 30s
TEVA-VALSARTAN/HCTZ TABLETS (Bulk)
ACT-VALSARTAN 40MG FC TABLETS 100
ACT-VALSARTAN 80MG FC TABLETS 100
ACT-VALSARTAN 160MG FC TABLETS 100
SANDOZ VALSARTAN 40 MG
SANDOZ VALSARTAN 80 MG
SANDOZ VALSARTAN 160 MG
SANDOZ VALSARTAN 320 MG
SANIS VALSARTAN 40 MG
SANIS VALSARTAN 80 MG
SANIS VALSARTAN 160 MG
PRO DOC LIMITEE VALSARTAN 40 MG
PRO DOC LIMITEE VALSARTAN 80 MG
PRO DOC LIMITEE VALSARTAN 160 MG
PRO DOC LIMITEE VALSARTAN 320 MG
SIVEM PHARMACEUTICAL ULC VALSARTAN 40 MG
SIVEM PHARMACEUTICAL ULC VALSARTAN 80 MG
SIVEM PHARMACEUTICAL ULC VALSARTAN 160 MG
SIVEM PHARMACEUTICAL ULC VALSARTAN 320 MG