News

இலங்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கனடா ,,

மீண்டும் மரண தண்டனையை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ள இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து கனடாவும் நார்வேயும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. சென்ற வாரம் இலங்கை ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா போதைப் பொருள் குற்றங்களில் ஈடுபடுவோர் தூக்கிலிடப்படுவார்கள் என்று அறிவித்திருந்தார். தூக்குத்தண்டனை மீது விதிக்கப்பட்டிருந்த 42 ஆண்டு கால தற்காலிகத் தடையை (moratorium) முடிவுக்கு கொண்டு வருவதற்காக வர்த்தகச் சலுகைகளை இழக்க வேண்டி வரும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதர்கள் இலங்கையை எச்சரித்துள்ளனர்.

மரண தண்டனை மீதான தற்காலிகத் தடையை தொடர வேண்டும் என்றும் மரண தண்டனையை எதிர்க்கும் இலங்கையின் மரபை தொடர்ந்து கடைப்பிடிக்குமாறும் தூதரக அமைப்புகள் ஜனாதிபதியைக் கேட்டுக் கொண்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர். இந்த அறிக்கைக்கு கனடாவும் நார்வேயும் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளன. இலங்கை மீண்டும் மரண தண்டனையை அறிமுகப்படுத்துமானால் கொழும்பு GSP-Plus status என்னும் சலுகையை உடனடியாக இழக்க வேண்டி வரும் என்று தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஏற்கனவே 2010ஆம் ஆண்டு இலங்கைக்கு இந்த சலுகை மறுக்கப்பட்டதும் சிறிசேனா தலைமையிலான அரசு 2015ஆம் ஆண்டு பதவிக்கு வந்ததும் மீண்டும் அச்சலுகைக்காக விண்ணப்பித்ததும் குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top