இலங்கையின் மறுசீரமைப்பு மற்றும் நீதிவழங்கல் செயற்பாடுகளில் முன்னேற்றம் போதாது – ஐ.நா.சபை.

இலங்கையின் மறுசீரமைப்பு மற்றும் நீதிவழங்கல் செயற்பாடுகளில் சிறிய அளவான முன்னேற்றமே காணப்படுவதாக, ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் தீவிரவாத தடுப்பு குறித்த விசேட அறிக்கையாளர் பென் எமர்சன் முன்வைத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலைமாறு கால நீதிவழங்கல் செயற்பாடுகள் தொடர்பான உறுதிப்பாடுகள் எவையும் இலங்கையில் நிறைவேற்றப்படவில்லை.
நெடுங்கால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிறுபான்மை தமிழ் மக்கள் தற்போதும் புறக்கணிக்கப்பட்டவர்களாகவும், உரிமையற்றவர்களாகவும் இருக்கின்றனர்.
அரசாங்கம் தங்களுக்கான தீர்வை வழங்கும் என்று சிறுபான்மை மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை தற்போது குறைவடைந்துக் கொண்டே செல்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.