News

இலங்கை நாடாளுமன்றின் எதிர்க்கட்சி தலைவராக மாறும் மஹிந்த.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்படவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் வாரங்களில் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக மஹிந்தவை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியினர் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் 16 பேர் இந்த திட்டத்தை செயற்படுத்தவுள்ளனர். இதன் ஆரம்பக்கட்ட நடவடிக்கையாக 70 உறுப்பினர்களை கொண்ட இந்த உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் சுயாதீன குழுவாக ஏற்றுக்கொள்ளுமாறு சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கோரிக்கை விடுப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top