News

இவர்களை பார்த்தால் வீட்டின் கதவை திறக்காதீர்கள்: மக்களுக்கு எச்சரிக்கை விடும் பொலிஸார்!

பிரித்தானியாவில் பல்வேறு விதமான மோசடி செயல்களில் ஈடுபட்டு, பொதுமக்களிடம் இருந்து ஏமாற்றி பணத்தை சம்பாதித்துள்ள 6 பேரின் புகைப்படங்களை வெளியிட்டு பிரித்தானிய பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பிரித்தானிய உட்பட 13 நாடுகளில் உள்ள மக்களிடம் மோசடி செயல்களில் ஈடுபட்டு, £ 3 மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமான பணத்தை கொள்ளையடுத்துவிட்டு தலைமறைவாக இருக்கும் 5 ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணின் புகைப்படங்களை பிரித்தானிய பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

இதில் பிரித்தானியாவின் Wolverhampton பகுதியை சேர்ந்த Kathleen McCarthy (29) -Oliver Boswell (30) என்ற தம்பதியினர் அதிகமான மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த தம்பதியினர் 14 முதியவர்களை ஏமாற்றி ஒரே வருடத்தில் £220,000 பவுண்ட்ஸ்களை கொள்ளையடித்துளார்.

அவரது கணவர் Oliver பொலிஸ், நீதிபதி மற்றும் வர்த்தக தரநிர்ணய அதிகாரி போல பல வேடங்களில் பொதுமக்களை ஏமாற்றியுள்ளார்.

இவர்களை அடுத்து, James Flynn (42) என்ற குற்றவாளி மேற்கு லண்டன் பகுதிகளில் £64,400 பவுண்ட் பணத்தை கொள்ளையடித்துள்ளார். 33 வயதான வர்த்தக தர அதிகாரி John McCarthy (33), 5 மோசடி செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

Wolverhampton பகுதியை சேர்ந்த John O’Brien (49) £75,000 பவுண்ட் பணமும், Daniel Sheridan (48) பாதிக்கப்பட்டவர்களுக்கு போன் செய்து பொலிஸ் அல்லது நீதிபதி பேசுவது போல மிரட்டி £79,000 பவுண்ட்ஸ் பணத்தை கொள்ளை அடித்துள்ளார்.

East Yorkshire பகுதியை சேர்ந்த Nathan Hudson (34) போலி நிதி நிறுவனம் நடத்தி £110,000 பவுண்ட்ஸ் மோசடி செய்து பொதுமக்களை ஏமாற்றியுள்ளார். South Norwood பகுதியை சேர்ந்த Denis Marku (21) தான், கிழக்கு ஐரோப்பியவை பொறுத்தவரை மிகப்பெரிய மோசடிக்காரன் என காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இவன் Chelsea வங்கியில் காசாளராக பணியாற்றுவதாக கூறி, வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கிலிருந்து £3 மில்லியன் பவுண்ட்ஸ் பணத்தை திருடியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இவர்களில் யாரேனும் உங்களிடம் அறிமுகமானால் உடனடியாக அவர்களை பற்றிய தகவல்களை காவல்துறைக்கு தெரிவிக்குமாறு லண்டன் மாநகர காவல் ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top