Canada

உக்கிரமான புயலினால் கியுபெக் பாதிப்பு!

கியுபெக்கில் வீசிய உக்கிரமான புயலினால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் தொழில்கள் மின்சாரம் குளிரூட்டிகளைமக்கள் இழந்தனர். திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட இப்புயலினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

செவ்வாய்கிழமை அதிகாலை 2மணியளவில் கிட்டத்தட்ட 57,600 ஹைட்ரோ-கியுபெக் வாடிக்கையாளர்கள் இருட்டடிப்பிற்கு ஆளானார்கள். மின் லைன்களில் மரங்கள் மற்றும் கிளைகள் விழந்ததால் லைன்கள் சேதமடைந்தன. இதனால் திங்கள்கிழமை இரவு 97000ற்கும் மேற்பட்ட செயலிழப்புக்கள் ஏற்பட்டன.

தேசிய தலைநகர் பிராந்தியத்தில் 11,000-ற்கும் மேற்பட்ட ஹைட்ரோ வாடிக்கையாளர்கள் மின் சாரத்தை இழந்துள்ளனர். கியுபெக்கின் மேற்கு பகுதியில் 9,000-வாடிக்கையாளர்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர். மணித்தியாலத்திற்கு 140-கிலோ மீற்றர்கள் வேகத்தில் காற்று வீசியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top