உச்ச வெப்பத்தில் காரிற்குள் குழந்தைக்கு நடந்த கொடூரம்! தாய் கைது.

பீற்றர்பொரோ, ஒன்ராறியோ–38வயதுடைய பெண் ஒருவர் குழந்தையை தனது புழுங்கும் காரிற்குள் விட்டு விட்டு வேறொரு காரில் சோதனை ஓட்டத்திற்கு சென்றுள்ளார் என பொலிசார் குற்றம் சாட்டியுள்ளனர்.
பீற்றர்பொரோ ஒன்ரா,வாகன தரகர் ஒருவரிடம் புதிய கார் ஒன்றை பரீட்சார்த்த ஒட்டம் செய்வதற்காக சென்றுள்ளார். குறிப்பிட்ட தரகு நிலைய ஊழியர் ஒருவர் பெண்ணின் குழந்தை வாகன இருக்கையில் பட்டியால் சுற்றப்பட்ட நிலையில் யன்னல்கள் மூடியவாறு இருந்தை கண்டுள்ளார்.
பொலிசாரின் புலன்விசாரனை திங்கள்கிழமை ஆரம்பமானதை தொடர்ந்து அனாமதேய அழைப்பு குழந்தைகள் உதவி சங்கத்திற்கு விடுக்கப்பட்டு குறிப்பிடப்பட்ட பெண் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
பெண்ணிடமிருந்த வளர்ப்பு குழந்தை குழந்தைகள் உதவி சங்கத்தினரால் அகற்றப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.