உண்மையை ஏற்றுக்கொண்ட சரத் பொன்சேகா!

நாம் மக்களுக்கு கொடுத்த வாக்கை நிரூபிக்க வில்லையென்பதை ஏற்றுக் கொண்டு தான் ஆகவேண்டும் என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஊழல் குற்றவாளிகளை இந்த அரசாங்கம் இதுவரை தண்டிக்க வில்லையே என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் பொன்சேகா இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
இது தொடர்பில் பேசிய அவர், கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான நடவடிக்கை எடுக்க முடியாமல் போயுள்ளமையை நான் ஏற்றுக் கொள்கின்றேன். நாம் மக்களுக்கு கொடுத்த வாக்கை நிரூபிக்க வில்லையென்பதை ஏற்றுக் கொண்டு தான் ஆகவேண்டும். இவ்வாறே போனால் அரசாங்கத்தின் எஞ்சியுள்ள காலத்திலாவது ஊழல் குற்றவாளிகளைத் தண்டிக்க முடியாமல் போகும் என்று குறிப்பிட்டுள்ளார்.