Canada

உன் குழந்தைகளை கொல்வேன்: இந்திய தம்பதி மீது இனவெறி தாக்குதல்…

கனடாவில் காரை தாறுமாறாக ஓட்டி பெண்ணுக்கு காயம் ஏற்படுத்திய நபர் அவர் கணவரிடம் மோசமாக பேசிய செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றாறியோவின் Stoney Creek பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நின்றிருந்த காரை 47 வயதான நபர் வேகமாக எடுத்த நிலையில் பெண் ஒருவர் மீது மோதியுள்ளார். இதில் அந்த பெண்ணுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இதை பெண்ணின் கணவர் தட்டி கேட்க, காரில் இருந்த நபர் அவருடன் சண்டை போட்டுள்ளார். அப்போது உன் குழந்தையை கொன்றுவிடுவேன், நான் கனடா குடிமகன் என கூறியதோடு தகாத வார்த்தைகளால் இனவெறி தாக்குதல் நடத்தியுள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட தம்பதிகள் பொலிசில் புகார் அளித்த நிலையில் சம்மந்தப்பட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

இதனிடையில் பாதிக்கப்பட்ட தம்பதி இந்தியர்கள் எனவும், கனடிய குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருகிறார்கள் எனவும் தெரியவந்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top