News

உறவினரால் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமி: 2 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு!

பிரித்தானியாவில் 13 வயது சிறுமி ஒருவர் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு காட்டுப்பகுதியில் தூக்கி வீசப்பட்ட கொடூரமான சம்பவம் தொடர்பாக, உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியாவின் Southampton பகுதியை சேர்ந்த Lucy McHugh என்ற 13 வயது சிறுமி கடந்த புதன்கிழமையன்று, நண்பரை பார்க்க செல்வதாக வீட்டி விட்டு வெளியேறியுள்ளார்.

மாலை நேரமாகியும் Lucy வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் இதனையடுத்து மோப்ப நாயின் உதவியுடன் காவலர்கள் நடத்திய தீவிரமான தேடுதல் வேட்டையில் இரண்டு நாட்களுக்கு பிறகு, Southampton பகுதியில் உள்ள விளையாட்டு மைதானம் அருகே சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடலை கைப்பற்றி பொலிஸார் பரிசோதனை மேற்கொள்ளும்பொழுது, கத்தியால் பலமுறை குத்தப்பட்டதற்கான அடையாளங்கள் கண்டறியப்பட்டன.

பின்னர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட காவலர்கள், அதே தெருவில் வசித்து வரும் சிறுமியின் உறவினர் Stephen Nicholson (24) என்பவரை கைது செய்தனர். இந்த நிலையில் இதுகுறித்து கருத்து பதிவிட்டுள்ள சிறுமியின் தாய் White, யாரும் Stephen வீட்டாருக்கு மிரட்டல் விடுக்க வேண்டாம். அவ்வாறு செய்வதால், இறந்த எங்களுடைய தேவதை Lucy திரும்பவரப்போவதில்லை என பதிவிட்டிருந்தார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top