News

உலகிலேயே உயரமான சிறுவன் 11 வயதில் 6 அடி.

சீனாவில் 11 வயது பள்ளி மாணவன் ஒருவன் 6 அடி உயரம் வளர்ந்திருப்பதால், உலகிலேயே உயரமான சிறுவன் என்னும் பெருமையை பெற்றுள்ளான்.

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் 6ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் ரேன் கேயூ. 11 வயதான இவனது தற்போதைய உயரம் 6 அடியாகும்.இதன் மூலம், உலகிலேயே இந்த வயதில் அதிக உயரம் கொண்ட சிறுவன் என்ற பெருமை இவனுக்கு கிடைத்துள்ளது. இதுகுறித்து ரேன் கேயூ கூறுகையில்,எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே என் வயது குழந்தைகளை விட மிக உயரமாகவே இருந்தேன். அதனால் சிலர் என்னுடன் விளையாட தயங்குவார்கள்.

பள்ளியிலும் வயது அதிகமானவன் என்று கருதி புது ஆசிரியர்கள் என்னை வகுப்புக்கு போகச் சொல்வார்கள். பள்ளி நாற்காலியில் அமர முடியவில்லை. அதனால் பெரிய நாற்காலி ஏற்பாடு செய்திருக்கிறார்கள். என்னுடன் படிக்கும் சக மாணவர்கள், என் இடுப்பு உயரமே இருக்கிறார்கள்.

சாலைகளில் நடக்கும்போது எல்லோரும் என்னை அதிசயமாக பார்ப்பார்கள். ஆனாலும், இந்த உயரம் தான் கின்னஸ் சாதனை புத்தகத்தில் என்னை இடம்பெற வைத்திருக்கிறது’ என தெரிவித்துள்ளான்.

ரேனின் தாய் இதுதொடர்பாக கூறுகையில், ‘அளவுக்கு அதிகமான உயரத்தால் பயந்துபோய், பல பரிசோதனைகளை மேற்கொண்டோம். ஹார்மோன், பிட்யூட்டரி சுரப்பியில் எதுவும் பிரச்சனை இல்லை என்று டாக்டர்கள் கூறிவிட்டார்கள்’ என தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top