எனது மறு அறிவித்தல் இல்லாமல் வடக்கு அமைச்சரவை கூட்டம் கூட்டக் கூடாது! ஆளுநர் உத்தரவு!

தனது அனுமதியின்றி வட மாகாண சபையின் அடுத்த அமைச்சரவை கூட்டத்தை கூட்டக் கூடாது என்று வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே உத்தரவு பிறப்பித்துள்ளார். அண்மையில், வடக்கு மாகாண சபையின் அமைச்சரவையில் பா.டெனீஸ்வரனும் ஓர் சட்டப்படியான அமைச்சராவார் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந் நிலையில் அமைச்சர் வாரியக் கூட்ட ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை வழங்குமாறு பிரதம செயலாளர் ஆளுநருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
பிரதம செயலாளர் அனுப்பிய கடிதத்திற்கு பதில் கடிதம் அனுப்பியுள்ள ஆளுநர், இன்றைய நிலையில் வடக்கு மாகாண சபையில் 6 அமைச்சர்கள் இருப்பதனைக் கருத்தில் கொண்டு அமைச்சர் வாரியக் கூட்ட விடயத்தில் தனது அனுமதியின்றி எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த 12ஆ ம் திகதி வடக்கு மாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதனுக்கு அனுப்பிய கடிதம் மூலம் உத்தரவிட்டுள்ளார்.