எலும்புக்கூடு அகழ்வு விவகாரம்- நேரடியாக பார்வையிட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக அதிகாரிகள்..

மன்னார் சதொச விற்பனை கட்டுமானப்பணி வளாகப்பகுதியில் இடம் பெற்று வரும் மனித எலும்பு அகழ்வு பணிகளை காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலக ஆணையாளர்கள் இருவர் இன்று புதன் கிழமை(25)காலை நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளனர்.
மன்னார் சதொச விற்பனை கட்டுமான பணியின் போது வளாகத்தினுள் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் இன்று புதன் கிழமை(25) 41 ஆவது நாளாக இடம் பெற்று வருகின்றது.
விசேட சட்ட வைத்திய அதிகாரி ராஜபக்ஸ தலைமையில் இன்றைய தினம் அகழ்வு பணிகள் ஆரம்பமானது.
இதன் போது காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலக ஆணையாளர்களான கணபதிப்பிள்ளை வேந்தன்,ரகீம் மிராக் ஆகியோர் அகழ்வு இடம் பெறுகின்ற இடத்திற்குச் சென்று அகழ்வு பணிகளை பார்வையிட்டதோடு,அகழ்வு பணிக்கு பொறுப்பாக இருக்கும் சட்ட வைத்திய அதிகாரி ராஜபக்ஸவிடம் தகவல்களை கேட்டு அறிந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.