News

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தலைவரிடம் கோரிக்கை முன்வைத்த காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்.

பல வருடங்களாக காணாமல் போயுள்ள தமது பிள்ளைகளை கண்டுப்பிடிக்க உதவவேண்டும் என்று காணாமல் ஆக்கப்பட்டோர்களின் தாய்மார் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் வருடாந்த அமர்வுக்கு இணையாக இடம்பெறும் நிகழ்வுகளில் இலங்கையில் போரின்போது காணாமல் போனோரின் உறவினர்கள் சில நிகழ்வுகளில் பங்கேற்றனர். இதன்போதே காணாமல் போனோரின் உறவுகள் சார்பில் நிகழ்வுகளில் பங்கேற்ற ஆறு இலங்கை தமிழ் தாய்மார் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தலைவருக்கு மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top