News

கடந்த காலங்களில் பேய்களும் பிசாசுகளும் நடத்திய ஆட்சி நல்லாட்சியிலும் தொடர்கிறது.- சி.சிவமோகன் எம்.பி.

தமிழர்களின் பிரதேசத்தினை ஆக்கிரமிப்பு செய்து வரும் அராஜக நிகழ்வுகள் சர்வ சாதாரணமாக அரங்கேறி வருகின்றன அந்த வகையில் வனவள பிரிவு, மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, கனியவள பிரிவு,வனஜீவராசிகள் திணைக்களம்,புவிசரிதவியல் திணைக்களம், கடல்தொழில் திணைக்களம் என்பவற்றுடன்,இறுதியாக தொல்பொருள் ஆராட்சி திணைக்களமும் இணைந்து ஆக்கிரமிப்பு முயற்சியில் இறங்கி உள்ளது.

இவர்களுடைய இச் செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய செயற்பாடுகள் அல்ல. கடந்த காலங்களில் பேய்களும் பிசாசுகளும் நடாத்திய ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து நல்லாட்சி என்ற ஒரு ஆட்சி நடைபெறுவதாக கூறிகொண்டிருக்கும் தருணத்தில் இப்படியான நிகழ்வுகள் ஏற்றுகொள்ளக்கூடியமாதிரியாக இல்லை. இவ்வாறான செயல் ஒட்டுமொத்தத்தில் தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசியல் மேலாதிக்கத்தின் அடையாளமாகத்தான் பார்க்கப்படுகின்றது.இப்படியான நிகழ்வுகள் சிங்கள இடங்களில் நடைபெறுவதல்ல.

இவ்வறான செயல் திட்டமிடப்பட்டு தமிழர்களின் பிரதேச ஆக்கிரமிப்புக்காக உருவாக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலின் கிழ் நடைபெற்று வருகின்றதுஎமது மக்கள் மிண்டும் ஒன்றுதிரண்டு இவ் அராஜக திணைக்களங்களை ஒட்டுமொத்தமாக விரட்ட வேண்டும். இவர்களின் அடாவடித்தனத்திற்கு ஓர் சிறந்த உதாரணம் இந்த தொல்பொருள் ஆராட்சி திணைக்களம்.

அன்பினையும் அகிம்சையையும் போதிக்கவேண்டிய பௌத்த துறவியே அடாவடித்தனத்தில்; ஈடுபடுவது தான் இவர்களின் அற செயலா என வைத்திய கலாநிதி சி.சிவமோகன் கேள்வி எழுப்பினார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top