கனடாவின் முதல் பேபிபெல் சீஸ் ஆலை!

87-மில்லியன் டொலர்கள் செலவில் கனடாவின் முதலாவது சிறிய பேபிபெல் சிற்றுண்டி ஆலை கியுபெக்கில் நிறுவப்பட உள்ளது. சிறுவர்களின் கவனத்தை ஈர்க்க கூடிய வகையில் இந்த சீஸ் வடிவமைக்கப் பட்டுள்ளது.
இவற்றை சுற்றியிருக்கும் உறையை அகற்றி விட்டு இதனுடன் வழங்கப்பட்டிருக்கும் சிறிய கிண்ணத்துள் போட்டு நுண்ணலையில் வைக்க வேண்டியது. இந்த திட்டம் 170-வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்தும்.
கனடிய பாலை பயன்படுத்தி 2020-ன் ஆரம்பத்தில் தயாரிப்பை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிறுவனத்திற்கு உலகம் பூராகவும் 12,700 ஊழியர்கள் உள்ளனர்.