Canada

கனடாவில் இஸ்லாமிய குடும்பத்தின் மீது இனவெறித் தாக்குதல்: வெளியான வீடியோ

கனடாவின் டொரண்டோவில் Jack Layton Ferry Terminalஇல் ஒரு இஸ்லாமியக் குடும்பத்தை தரக்குறைவான வார்த்தைகளால் ஒருவர் வசைபாடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் குறிப்பிட்ட அந்த நபர் இஸ்லாமியர் ஒருவரை நெருங்கி ஏதோ கூற முயல அதற்கு அவர் உன் மூச்சுக் காற்றில் சாராய நாற்றம் அடிக்கிறது என்று கூற அங்கிருந்து பிரச்சினை தொடங்குகிறது.

அந்த நபர் உடனே கோபமாக கத்தத் தொடங்கி விடுகிறார். ஆபாச வார்த்தைகளையும் சேர்த்து இது என் நாடு, என்னுடைய நாட்டில் என்னைக் கேள்வி கேட்க நீயார் என்று அடிக்க வருவதுபோல் கத்துகிறார் அந்த நபர். அந்த இஸ்லாமிய நபருடன் இருக்கும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த இன்னொரு நபரையும் பிடித்துத் தள்ளி விடுகிறார் அவர்.பின்னணியில், அந்த ஆள் குடித்திருக்கிறார், அவர் போகட்டும், அதுதான் நாற்றம் அடிக்கிறதே என்று ஒரு பெண்ணின் குரல் கேட்கிறது.

இன்னொரு பெண் தனது போனில் பொலிசாரை அழைத்து இந்த மனிதன் எனது சகோதரனை மோசமாக திட்டுகிறான், அவனைத் தள்ளி விடுகிறான் என்று புகார் தெரிவிக்கிறார். பெண் பாதுகாவலர் ஒருவர் வந்து இருவரையும் பிரித்து விடும் வரை இந்த உரையாடல் தொடர்கிறது. சமூக ஊடகங்களில் வெளியான அந்த வீடியோவைப் பார்த்துவிட்டு பலரும் அந்த மனிதனுக்கு கண்டனங்கள் தெரிவித்து வருகின்றார்கள்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top