கனடாவில் துப்பாக்கி சூடு நடத்திய மூவர் கைது !

கனடாவில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட மூவரை பொலிசார் கைது செய்துள்ள நிலையில் துப்பாக்கிகளையும் கைப்பற்றியுள்ளார்கள். ஒன்றாறியோவின் Mississauga நகரில் வெள்ளிக்கிழமை அதிகாலை மூன்று பேர் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அதிர்ஷ்டவசமாக இச்சம்பவத்தில் யாருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை.
சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த நிலையில் மூவரையும் கைது செய்தார்கள். இதோடு அவர்கள் பயன்படுத்திய கார் மற்றும் இரண்டு துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டன. சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.