கனடாவில் பிரபல நகரத்தில் புகைப்பதற்கு தடை!

ஹலிஃபெக்ஸில் நகர நிர்வத்திற்கு உட்பட்ட வீதிகள், பூங்காக்கள், நடைபாதைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் புகைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் புகைப்பதனால் புகைக்கும் பழக்கம் இல்லாதவர்களும் கடுமையான பாதிப்பை எதிர்கொள்வதாக கூறப்பட்டதையடுத்தே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நகரத்தின் இந்த நடவடிக்கையை, தவிர்க்கமுடியாத ஒரு முக்கிய நடைமுறையின் தொடக்கம் என்று கனேடிய புற்றுநோய் தடுப்புச் சங்கம் பாராட்டியுள்ளது.இதேவேளை புகைத்தலைத் தடைசெய்யும் நகர நிர்வாத்தின் இந்த நடவடிக்கை தொடர்பில் எதிர்மறையான விமர்சனங்களும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.