கனடா குழந்தை நலன் அதிகரிப்பு நடை முறையில்!

கனடா குழந்தை நலன் திட்டத்திற்கான தகுதி உடையவர்களிற்கு மாதாந்த கட்டணம் உயர்கின்றது. மத்திய அரசாங்கம் ஆரம்பத்தில் திட்டமிட்டதை விட இரண்டு வருடங்கள் முன்னதாக இந்த அதிகரிப்பை அறிவித்துள்ளது.
6-வயதிற்குட்பட்ட பிள்ளை ஒன்றின் வருடாந்த தொகை 6,400டொலர்களிலிருந்து 6,496 டொலர்களாக அதிகரிக்கின்றது. 6-முதல் 17-வயது வரையிலான பிள்ளை ஒன்றின் வருடாந்த தொகை 5,400 டொலர்களிலிருந்த 5,481டொலர்களாக அதிகரிக்கின்றது.
30450-டொலர்கள் அல்லது அதற்கு குறைவான வருடாந்த வருமானம் பெறும் குடும்பம் இந்த அதிகமான வருடாந்த தொகையை பெறுவர். மத்திய அரசாங்கத்தின் கணிப்பின் பிரகாரம் 23.3பில்லியன் டொலர்களிற்கும் மேலான தொகை 3.7-மில்லியன் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவருகின்றது.