Canada

கனடா மக்களுக்கு எச்சரிக்கை! ATM இயந்திரங்களில் கொள்ளை ..

ரொறன்ரோவில் உள்ள இரு ATM இயந்திரங்களில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களின் பின்னர் பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் 28ஆம் திகதி Keele Street பகுதியில் உள்ள ATM இயந்திரத்தில் 26 வயதுடைய ஒருவர் பணம் பெற்றுக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த இருவர் அவரின் முகத்தில் தாக்கி, கால் கைகளை கட்டி தரையில் போட்டுவிட்டு அவரது வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இதேபோல கடந்த ஜுலை மாதம் 6ஆம் திகதி அதிகாலை 12:40 மணியளவில் 19 வயது பெண்ணை தாக்கிவிட்டு அவரது வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையிட்டு சென்றுள்ளனர். இவ்வாறு பல கொள்ளைச் சம்பவங்கள் குறித்த பகுதியில் அதிகரித்துள்ள நிலையில் ரொறன்ரோ பொலிஸார் மக்களை அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் குறித்த கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களது புகைப்படங்களை CCTV காணொளிகள் மூலம் பெற்றுக்கொண்ட பொலிஸார் அவர்களை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். அத்துடன் குறித்த கொள்ளையர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் 416-222-TIPS (8477) என்ற இலக்கத்திற்கு தொடர்புகொண்டு தகவல் வழங்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Latest News

To Top