கனடா வெப்ப எச்சரிக்கை! 45 டிகிரி செல்சியஸ் ஆக உணரப்படலாம்.

கனடா தின வார இறுதி நாட்களில் ஒன்ராறியோ மற்றும் கியுபெக் பகுதியில் வியர்த்து வழியும் வெப்ப அலை காணப்படலாம் என எச்சரிக்கப்படுகின்றது. அதி உயர் வெப்பநிலை-ஈரப்பதனுடன் கூடி 45-டிகிரி செல்சியஸ் ஆக உணரப்படலாம். ஒன்ராறியோவில் ஒட்டாவா, ரொறொன்ரோ மற்றும் பார்ரி போன்ற நகரங்களில் சனிக்கிழமை வெப்பநிலை 35 C அல்லது அதற்கும் உயர்வாகலாம் என எதிர் பார்க்கப்படுகின்றது.தீவிர வெப்பம் குறித்து கனடா சுற்று சூழல் எச்சரிக்கின்றது. ரொறொன்ரோவில் ஈரப்பதனின் தன்மையை பொறுத்து வெப்பநிலை 45டிகிரி செல்சியசாக உணரப்படும்.
55-வருடங்களிற்கு முன்னர் யூலை 1-ல் பாராளுமன்ற ஹில்லில் இடம் பெற்ற கனடா தினத்திற்கு வந்தவர்கள் அன்றய வெப்பநிலையை இம்முறையும் உணரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை மிகுந்த வெப்பமாகவும் புழுக்கம் மிகுந்தும் காணப்படலாம். வெப்ப மண்டல நாடுகளில் காணப்படும் நிலை போன்று இருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. மொன்றியலில் 40டிகிரி செல்சியசாக காணப்படும். இரவு வெப்பநிலை 20டிகிரி செல்சியசாக காணப்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த வெப்ப அலை அடுத்த வாரமும் தொடரலாம். நகரின் பொது சுகாதார பிரிவு மக்கள் வெளிக்கள உடல் செயற்பாடுகளை தவிர்க்குமாறும் அதிக அளவு தண்ணீர் அருந்துமாறும் அறிவுறுத்துகின்றது.