காட்டுத்தீ அண்மிப்பதால் ஐக்கியமாகும் மக்கள்!

ரொறொன்ரோ- பாரிய நெடுஞ்சாலையை காட்டு தீ அண்மிப்பதால் பாரி சவுன்ட் ஒன்ராறியோ சமுதாயம் ஒன்றாக சேர்ந்து கொள்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரி சவுன்ட் 33 எனப்படும் பாரி சவுன்ட் தீச்சுவாலை யூலை 18ல் ஆரம்பித்த நாளில் இருந்து ஒன்ராறியோ தீயணைப்பு விரர்கள், மற்றய மாகாணங்களை சேர்ந்த தங்களின் சகாக்கள் அத்துடன் ஐக்கிய நாடுகள் மற்றும் மெக்சிக்கோ நாடுகளை சேர்ந்தவர்களுடன் சேர்ந்து போராடி வருகின்றனர்.
இவர்களுடன் சேர்ந்து சமூகத்தினரும் தங்களால் இயன்ற ஆதரவை வழங்கி வருகின்றனர். பாரி சவுன்டில் சோபீஸ் நிறுவனம் ஒன்றை நடாத்தும் மத்தியு டிரொயின் என்பவர் தீயணைப்பு வீரர்களிற்கு உணவு வழங்க இயற்கை வள அமைச்சின் அனுமதியை கோரியுள்ளார்.
உணவு பொதிகளை பெட்டிகளிலும் குளிரூட்டிகளிலும் வைக்க மக்கள் உதவியுள்ளனர். தீயானது தற்போது 76சதுர கிலோ மிற்றர்கள் வரை சென்றுள்ளதாகவும் நீர் அடிப்பதன் மூலம் தீயை அணைக்கும் விமானங்கள் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயன்று கொண்டிருக்கின்றன எனவும் கூறப்பட்டுள்ளது.
டிரான்ஸ் கனடா நெடுஞ்சாலையை அண்மிக்க 7-கிலோ மீற்றர்கள் மட்டுமே உள்ளதென இயற்கை வளங்கள் அமைச்சு தெரிவிக்கின்றது. எதிர்வரும் வாரங்களிலும் தியணைப்பு வீரர்களிற்கு உணவுகள் வழங்குவதை தொடர உள்ளதாக டிரொயின் தெரிவித்துள்ளார்.